நீர் உம் குலம் வாழ உயிர்களை -கொல்வது ...
எல்லா வழிகளும் தெரிவதால் ....
நாங்கள் தனித்து இருந்தாலும் .....
கூட்டமாக தான் வாழ்கிறோம் ...
நீர் -கூட்டமாக கூடினாலும் ...
தனி தனியாக வாழ்வது -உம் ...
சுய நலன்களை கருதி .....
மிருக வதை சட்டம் -என்பீர்கள் ...
புளுகிராஸ்என்பீர்கள்-எங்களை ....
காப்பாற்றுகிறோம் என்பீர்கள் ...
ஆனால் -நீங்களேஎங்களை-உம் ..
வீட்டு செல்ல பிராணிகளாய் -வளர்ப்பீர்கள் ..
யாமந்த ஆடு கோழி ,மாடு .பன்றிகளை ...
வெட்டி -உணவாக சமைபீர்கள் ....
ஊருக்கு விருந்து வைப்பீர்கள் ...
ஏன் - சிங்கம் ,புலி யானை ..
இதையெல்லாம் உண்பதில்லை ....
இவைகளை -நெருங்கினால் அவை ....
உங்களை உண்டுவிடும் என்பதால் ....
இருந்தாலும் விடுகிறீர்களா ....
அவைகளையும் தந்திரமாக -பிடித்து ...
கொன்று தொலையும் தந்தத்தையும் ..
விற்று பணம் பார்த்து கொள்கிறீர்கள் ....
நீங்கள் மட்டும் இறக்கும் போது ...
உம்முடன் -அந்த பணத்தை போட்டு ..
.புதைகிரார்கள இல்லையெ -உம் ..
கடைசி பயணத்தில் உம் -நெற்றியில் ..
ஒரே -ஒரு ரூபாய்தான் ஓட்டபடுகிறது ...
அதவும் -சுடுகாட்டில்
வெட்டியான் எடுத்து கொள்கிறான்அத்தனை கஷ்டபட்டு வாழ்ந்து .....
கடைசியில் அந்தஒரு ரூபாய் கூட ...
சொந்தம் இல்லை உங்களுக்கு ....
அதற்க்கு நீங்களும் எங்களை- போல் \
வாழ்ந்து பாருங்களேன் கடைசியில் ...
சந்தோஷமாவது மிஞ்சும் ....
இதில் உங்களுக்கு ஆறு அறிவு .என்பதும் ...
எங்களுக்கு ஐந்து அறிவு -என்பதில் ...
என்ன சந்தோசம் உங்களுக்கு ...
நாங்கள் எப்படியோ வாழ்ந்து
தானாகவோ கொல்லபட்டோ சாகிறோம் ...
உங்களை போல் கச்டபடாமல் ....
நீங்களோ கஷ்டப்பட்டு வாழ்ந்து ...
தானாகவோ இல்லை யாராலையோ ....
கொல்லப்பட்டு சாகிறீர்கள் .....
உங்களுக்கும் எங்களுக்கும் ஒரே...
ஒரு வித்தியாசம் தான் ....
பேச முடியவில்லை என்பது ...
( கூடி வாழ்தல் கோடி நன்மை )
( இல்லாதவருக்கு குடுத்து வாழ்தல்
குலத்திற்கே நன்மை )
சனி, 30 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக